×

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்த வடகொரியா… தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் விழுந்தததாக ஜப்பான் குற்றச்சாட்டு

பியாங்யாங் : அமெரிக்காவையும் தென் கொரியாவையும் மிரட்டுவதற்காக கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை வட கொரியா ஏவி இருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அண்மையில் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கொரிய எல்லை அருகே 5வது கட்ட போர் ஒத்திகை நடத்தினர். இந்த ராணுவ ஒத்திகை நிறைவு பெற்ற நிலையில், இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்தது. தங்கள் நாட்டின் மீது படை எடுப்பதற்கான ஒத்திகையே இந்த போர் ஒத்திகை என்று குற்றம் சாட்டியுள்ள வடகொரியா, தலைநகர் பியாங்யாங் அருகில் இருந்து கடலை நோக்கி 2 ஏவுகணைகளை ஏவி உள்ளது .

இந்த ஏவுகணைகள் தங்கள் நாட்டு சிறப்புப் பொருளாதார மண்டல பகுதியில் விழுந்தததாக ஜப்பான் பிரதமர் Fumio Kishida குற்றம் சாட்டியுள்ளார். வடகொரியா செய்து இருப்பது சர்வதேச நாடுகளின் அமைதியையும் பாதுகாப்பையும் குலைக்கும் செயல் என்று சாடியுள்ளார். கடந்த மே மாதம் புவிச்சுற்று வட்டப்பாதையில் உளவு செயற்கைகோளை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட வடகொரியா தோல்வி அடைந்தது. தற்போது 780 கிமீ தூரம் சென்று இலக்கை தாக்கும் 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவி உள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

The post கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்த வடகொரியா… தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் விழுந்தததாக ஜப்பான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Japan ,North Korea ,Pyongyang ,United States ,South Korea ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...